Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ரவி செனவிரத்ன; உதய கம்மன்பில பரபரப்பு குற்றச்சாட்டு!

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ரவி செனவிரத்ன; உதய கம்மன்பில பரபரப்பு குற்றச்சாட்டு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிரதான குற்றவாளிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொது பாதுகாப்பு அமைச்சின் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமியவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கைகளை வெளியிடுவதற்காக கொழும்பில் இன்று (21) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்த ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை குழுவின் வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளில் ஒன்றை இன்றும் மற்றைய அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமையும் வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கம்மன்பில அங்கு மேலும் தெரிவித்ததாவது,

காவல்துறையினரின் முக்கிய விசாரணையில் சந்தேக நபராக மாறியுள்ள பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை உடனடியாக அப்பதவியில் இருந்து நீக்குமாறு ரணில் விக்ரமசிங்கவின் குழு பரிந்துரைத்துள்ளது.

ரவி செனவிரத்ன அந்த பதவியில் இருக்கும் வரை காவல்துறையினரிடம் இருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது, குறிப்பாக ஈஸ்டர் தாக்குதல் பாதிக்கப்பட்டவர்களுக்கு.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் ரவி செனவிரத்னவிற்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளன.

கிடைக்கப்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச புலனாய்வு தகவல்களுக்கமைய ரவி செனவிரத்ன செயற்பட்டிருந்தால் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை தடுத்திருக்கலாம்.

ரவிசெனவிரத்னவை உடனடியாக பதவியில் இருந்து நீக்காவிட்டால் அடுத்த நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக பதவி நீக்கம் கொண்டு வருவோம்” என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026
நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!
செய்திகள்

நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!

September 20, 2026
அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!
செய்திகள்

அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!

September 20, 2026
தரமற்ற குழந்தை டயப்பர்கள் விற்பனை; நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!
செய்திகள்

தரமற்ற குழந்தை டயப்பர்கள் விற்பனை; நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!

September 20, 2026
இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிப்பு; மட்டக்களப்பில் குறைந்த பாலின விகிதம்!
செய்திகள்

இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிப்பு; மட்டக்களப்பில் குறைந்த பாலின விகிதம்!

September 20, 2026
Next Post
கல்லடியில் திருட்டுச் சம்பவம்; கணவன் மனைவி கைது!

கல்லடியில் திருட்டுச் சம்பவம்; கணவன் மனைவி கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு