Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய உயர்ஸ்தானிகர் – ஜனாதிபதி செயலாளருக்கு இடையில் சந்திப்பு; இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிலையாகத் தீர்வு காண்பதன் அவசியம் குறித்து ஆராய்வு

இந்திய உயர்ஸ்தானிகர் – ஜனாதிபதி செயலாளருக்கு இடையில் சந்திப்பு; இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிலையாகத் தீர்வு காண்பதன் அவசியம் குறித்து ஆராய்வு

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளருக்கு இடையில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற சந்திப்பின்போது இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கு நீண்டகால அடிப்படையிலான தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு செவ்வாய்கிழமை (22) கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது வடக்குக் கடலில் தற்போது நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நீண்டகால அடிப்படையில் தீர்வு காணப்படவேண்டியதன் அவசியத்தை இருதரப்பினரும் வலியுறுத்தினர்.

அதேபோன்று இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களை வெற்றி கொள்வதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இச்சந்திப்பில் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய திட்டங்கள் தொடர்பிலும் மீளாய்வு செய்யப்பட்டதுடன், இந்திய கடனுதவிகள் மூலம் நிதியளிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது.

அத்தோடு இச்செயற்திட்டப்பணிகளை உரிய நேரத்தில் நிறைவுசெய்வதை முன்னிறுத்தி அப்பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இருதரப்பினராலும் வலியுறுத்தப்பட்டது.

Tags: Battinaathamnewsinternationalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது
செய்திகள்

சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது

July 29, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
இலங்கை அரச மருத்துவமனையொன்று அறவிடும் பரிசோதனை விலை விபர பட்டியல்
செய்திகள்

இலங்கை அரச மருத்துவமனையொன்று அறவிடும் பரிசோதனை விலை விபர பட்டியல்

July 29, 2026
Next Post
நாட்டில் அரிசி தட்டுப்பாடு இல்லை போதுமான அளவில் அரிசி கையிருப்பு உள்ளது; ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டில் அரிசி தட்டுப்பாடு இல்லை போதுமான அளவில் அரிசி கையிருப்பு உள்ளது; ஜனாதிபதி தெரிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு