Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உதய கம்மன்பிலவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

உதய கம்மன்பிலவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

2 years ago
in செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் எழுத்துமூல ஆட்சேபனைகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலியான வழக்கறிஞர் பத்திரத்தை சமர்ப்பித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்கு சொந்தமான 21 மில்லியன் ரூபா பெறுமதியான நிறுவனப் பங்குகளை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் உதய கம்மன்பில உள்ளிட்ட இருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதன்போது, ​​பிரதிவாதி உதய கம்மன்பில நீதிமன்றத்தில் முன்னிலையாகியதுடன், மற்றைய பிரதிவாதியான சிட்னி ஜயரத்ன உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இதேவேளை சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான எழுத்துபூர்வ ஆட்சேபனைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டது.

1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த குற்றத்தை செய்ததாக குற்றம் சுமத்தி உதய கம்மன்பில உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சில நாட்களாக உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இறக்குமதியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு; ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம்
செய்திகள்

இறக்குமதியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு; ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம்

October 8, 2026
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை
உலக செய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை

October 8, 2026
ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை
செய்திகள்

ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை

October 8, 2026
இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை ; விசேட வைத்தியர் எச்சரிக்கை
செய்திகள்

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை ; விசேட வைத்தியர் எச்சரிக்கை

October 8, 2026
நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச
செய்திகள்

நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச

October 8, 2026
டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்
செய்திகள்

டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

October 8, 2026
Next Post
தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்குமிடையே தொடரும் புதுவித மோதல்

தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்குமிடையே தொடரும் புதுவித மோதல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு