தென் கொரியா, வடகொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு குப்பைகள் நிரப்பப்பட்ட இராட்சத பலூன்களை தென்கொரியாவுக்குள் வடகொரியா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தென் கொரியாவுக்குள் மீண்டும் குப்பை பலூன் ஏவப்பட்டுள்ளது. இந்த பலூன் தலைநகர் சியோலில் உள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் விழுந்துள்ளது. அந்த குப்பையில் ஆபத்தான பொருட்கள் எதுவுமில்லையென்று தென் கொரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடகொரிய பலூன் தரையிறங்கும் போது ஜனாதிபதி யூன் சுக் இயோல் அந்த வளாகத்தில் இருந்தாரா என்பது தெரிவிக்கப்படவில்லை.
வட கொரியா ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பலூன்களை தரையிறக்க தொடங்கியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.