Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவில் இருந்து பாதுகாப்பு ஸ்டிக்கர்கள்; மாலபே போலி மதுபான வலையமைப்பு அம்பலம்!

இந்தியாவில் இருந்து பாதுகாப்பு ஸ்டிக்கர்கள்; மாலபே போலி மதுபான வலையமைப்பு அம்பலம்!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கடுவெல, மாலபே சுதர்ஷன மாவத்தையில் இரகசியமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட மதுபானப் பாட்டில்களுக்கான பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் இந்தியாவில் உள்ள அச்சிடும் நிறுவனம் ஒன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், உரிமம் பெற்ற மதுபானங்களைப் போன்ற தோற்றத்தில் தயாரிக்கப்பட்டு, போலி லேபிள்கள் மற்றும் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட 18,000-க்கும் மேற்பட்ட மதுபானப் போத்தல்களும், அவற்றை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஒருவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், போலி மதுபானங்கள் மலையகப் பகுதிகளுக்கும் கிழக்கு மாகாணத்தில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களுக்கும் விநியோகிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 25 மதுபான விற்பனை நிலையங்களுக்கு இந்த போலி மதுபானங்களை விநியோகித்ததாகக் கூறப்படும் தொழிலதிபர் ஒருவரும், மதுபானங்களை ஏற்றிச் சென்ற லொறியும் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட எத்தனால் மற்றும் ‘பிரிடெக்ஸ்’ (Britex) எனப்படும் இரசாயனப் பொருளை வழங்கியதாகக் கூறப்படும் வத்தளை பகுதியைச் சேர்ந்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், சட்டவிரோத மதுபான ஆலை இயங்கிய வீட்டின் உரிமையாளர் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாகவும், அவரது அறிவோடு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த சட்டவிரோத மதுபான வியாபாரத்திற்கு சில கலால் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிடைத்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்
செய்திகள்

கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்

October 7, 2026
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை சகல வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஹிஸ்புல்லாஹ்
செய்திகள்

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை சகல வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஹிஸ்புல்லாஹ்

October 7, 2026
மன்னாரில் தலைதூக்கிய தொடர் திருட்டு; ஒரே வாரத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை!
செய்திகள்

மன்னாரில் தலைதூக்கிய தொடர் திருட்டு; ஒரே வாரத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை!

October 7, 2026
மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் 4 புதிய மதுபானசாலைகள்?
செய்திகள்

மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் 4 புதிய மதுபானசாலைகள்?

October 7, 2026
கிளிநொச்சியில் 17 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

கிளிநொச்சியில் 17 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

October 7, 2026
மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி; சவூதிக்கு சென்ற இலங்கை சட்டத்தரணிகள் குழு
செய்திகள்

மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி; சவூதிக்கு சென்ற இலங்கை சட்டத்தரணிகள் குழு

October 7, 2026
Next Post
பேராதனையில் இணைந்திருந்த இரட்டையர்கள் வெற்றிகரமாகப் பிரிப்பு; உலகின் முதல் சிறுநீரக மாற்று சாதனை!

பேராதனையில் இணைந்திருந்த இரட்டையர்கள் வெற்றிகரமாகப் பிரிப்பு; உலகின் முதல் சிறுநீரக மாற்று சாதனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு