Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈஸ்டர் தாக்குதலின் மற்றுமொரு அறிக்கை இன்று வெளிவரவுள்ளது

ஈஸ்டர் தாக்குதலின் மற்றுமொரு அறிக்கை இன்று வெளிவரவுள்ளது

2 years ago
in செய்திகள்

இலங்கையில் இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு அறிக்கையை வெளியிடவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாமின் அறிக்கையை இன்று (28) வெளியிடவுள்ளதாக உதய கம்மன்பில மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, குறித்த அறிக்கையினை கட்சியின் தலைமையகத்தில் வைத்து இன்று முற்பகல் 10 மணிக்கு ஊடகங்களுக்கு வெளியிட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.என்.ஜே.டி.அல்விஸின் அறிக்கையை உதய கம்மன்பில கடந்த 21ஆம் திகதி வெளியிட்டிருந்தார்.

முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர , தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருமான ரவி செனவிரத்ன, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும், தற்போதைய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான ஷானி அபேசேகர ஆகியோர் மீது அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் இலங்கையின் அரசியல் அரங்கில் அண்மையில் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் பற்றி இதற்கு முன்னர் ஒரு வார்த்தை கூட பேசாத அரசியல் தலைவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இப்போது இது பற்றி பேசுவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ரவி செனவிரத்ன; உதய கம்மன்பில பரபரப்பு குற்றச்சாட்டு!
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.90 இலட்சம் பெறுமதியான கடல் அட்டைகள் பறிமுதல்!
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.90 இலட்சம் பெறுமதியான கடல் அட்டைகள் பறிமுதல்!

November 4, 2026
இனி பணத்தைச் சேமிக்க வேண்டிய அவசியமே இருக்காதா?; எலான் மஸ்க்கின் எதிர்காலக் கணிப்பு
உலக செய்திகள்

இனி பணத்தைச் சேமிக்க வேண்டிய அவசியமே இருக்காதா?; எலான் மஸ்க்கின் எதிர்காலக் கணிப்பு

November 4, 2026
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

November 4, 2026
நாட்டின் 5 பிரதான வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்!
செய்திகள்

நாட்டின் 5 பிரதான வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்!

November 3, 2026
ரம்புக்கனைக்கு சென்ற ரயில் மீது மரம் வீழ்ந்து விபத்து!
செய்திகள்

ரம்புக்கனைக்கு சென்ற ரயில் மீது மரம் வீழ்ந்து விபத்து!

November 3, 2026
இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இராஜதந்திர நடவடிக்கை; எம்.பி. சிறிநாத் தெரிவிப்பு!
செய்திகள்

இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இராஜதந்திர நடவடிக்கை; எம்.பி. சிறிநாத் தெரிவிப்பு!

November 3, 2026
Next Post
கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு அட்டை விநியோகம் இன்றுமுதல் ஆரம்பம்

கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு அட்டை விநியோகம் இன்றுமுதல் ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு