Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்

இடியுடன் கூடிய மழையும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய பொது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட்டு இழப்புகளை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், தென் மற்றும் வடமேல் கரையோரப் பிராந்தியங்களிலும் அத்துடன் வட மாகாணத்திலும் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய , சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் புத்தளம் தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கியும் நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மாறுபட்ட திசைகளில் இருந்தும் காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது
செய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது

September 13, 2026
அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
Next Post
ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படாது என்றால் சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்குங்கள்; உதய கம்மன்பில

ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படாது என்றால் சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்குங்கள்; உதய கம்மன்பில

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு