Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை; ஜனாதிபதி செயலகம்

மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை; ஜனாதிபதி செயலகம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தினை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவரின் ஓய்வூதியத்துக்கும், கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் செயலக கொடுப்பனவுக்கும் உரித்துடையவர்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு 03 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், Mercedes Benz -600 maybatch (B/P) car 2008, Toyota Land Cruiser 2017, Mercedes Benz – G63 AMG 4*4 2850 jeep 2013 ஆகிய 03 வாகனங்கள் அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

அதற்காக மாதாந்த எரிபொருள் கொடுப்பனவாக 1950 லீற்றர் வழங்கப்படுவதுடன், அந்த வாகனங்களுக்காக மூன்று சாரதிகள் வழங்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படுகிறது.

அதற்காக தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள இராணுவம் மற்றும் கடற்படை வீரர்களுக்கு மேலதிகமாக 180 இற்கும் மேற்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களில் 29 காவல்துறை சாரதிகளும் கடமையில் உள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை மதிப்பிடுவதற்கு தற்போது அமைச்சரவை உபகுழுவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் இது தொடர்பில் தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இந்திய உயர்ஸ்தானிகரிடம் தெரிவிப்பு

இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இந்திய உயர்ஸ்தானிகரிடம் தெரிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு