அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றிலிருந்து இரண்டு மாடுகளைத் திருடிச் சென்றதாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக லுனுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்தனர்.
லுனுகம்வெஹெர பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீரவில , பந்தகிரிய மற்றும் லுனுகம்வெஹெர ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருடப்பட்ட இரண்டு மாடுகளும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் மூவரும் நேற்று திங்கட்கிழமை (04) திஸ்ஸமஹாராமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுகம்வெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.