Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
5 மாகாண அதிகார சபைகளுக்கான புதிய தலைவர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநரால் நியமனம் வழங்கி வைப்பு

5 மாகாண அதிகார சபைகளுக்கான புதிய தலைவர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநரால் நியமனம் வழங்கி வைப்பு

2 years ago
in செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா பணியகம், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு, சாலை மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, முன்பள்ளி கல்வி பணியகம் ஆகிய 5 அதிகார சபைகளிக்கான தலைவர்களை நியமித்து அவர்களுக்கான நியமனக் கடிதங்களை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர நேற்று செவ்வாய்க்கிழமை (5) திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் வைத்து வழங்கிவைத்தார்.

மாகாண அதிகார சபைக்களுக்கான தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை நியமித்து அவர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு திருகோணமலை ஆளுநர் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதில் அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, கலந்துகொண்டு அவர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கிவைத்தார்.

இதன்போது நிறுவனங்களின் புதிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநர் சுதந்திரமாக செயற்படுவதற்கான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும் என்றும் அரசியல் தலையீடுகள் இன்றி தமது சேவைகளை ஆற்றக்கூடிய சூழலை உருவாக்குவதாகவும் தெரிவித்தார்.

இதில் மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவராக ஜி.சுகுமாறன், மாகாண சுற்றுலா பணியக தலைவராக எம்.ஜி.பிரியந்த மலவனகே, மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு தலைவராக திருமதி.ரஜினி கணேசபிள்ளை, மாகாண சாலை மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தலைவராக கித்சிறி நவரத்ன, மாகாண முன்பள்ளி கல்வி பணியக தலைவராக அ.விஜயானந்தமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான நியமன கடிதங்களை அளுநர் வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
செய்திகள்

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

August 4, 2026
Next Post
சூடு பிடிக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் – முன்னிலை வகிக்கும் வேட்பாளர்

சூடு பிடிக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - முன்னிலை வகிக்கும் வேட்பாளர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு