Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேர்தலில் தோற்றால் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன்; சுமந்திரன்

தேர்தலில் தோற்றால் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன்; சுமந்திரன்

2 years ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு செல்லப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார் .

தேர்தல் கால ஊடகச் செவ்வியில் அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்த்துள்ளதாவது,

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து வேட்பாளர் நியமனம் கிடைக்கவில்லை என்பதனால் வேறு கட்சிகளிலும், சுயேச்சைகளிலும் போட்டியிடுபவர்களினாலேயே தமிழரசு மீது அதிகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இதேநேரம் அநுராகுமார திஸாநாயக்காவின் கட்சியைப் பொறுத்த மட்டில் ஊழல் அற்ற ஆட்சி, நேர்மையான நிர்வாகம் தொடர்பில் தமிழர்களிடம் ஒரு நம்பிக்கையான எதிர்பார்ப்பு இருக்கலாம்.

ஆனால், தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கையில் அவர்களுக்கு முழுமையான ஈடுபாடு கிடையாது.

நாட்டில் எல்லாரும் சமமாகப் பேணப்பட்டால் , நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்தால் , எல்லாப் பிரச்சினைகளும் தீரும் என அவர்கள் எண்ணுகின்றார்கள். தமிழர்கள் தனியான ஒரு மக்கள் குழாம், அவர்கள் தனியான தேசம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

அவர்களிடம் பிற நல்ல விடயங்கள் இருக்கலாம். ஆனால், எங்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் இணங்காதவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள்.

ஆகவேதான் நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கு வாக்களியுங்கள் எனக் கோருகின்றோம் என்றார். இதேநேரம் முதன் முதல் 2010 இல் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் வந்தாலும் அதன் பின்பு இரண்டு தடவைகள் நேரடியாகப் போட்டியிட்டே நாடாளுமன்றம் சென்றதாகவும் சுமந்திரன் கூறியுள்ளார்.

அந்தவகையில் இம்முறையும் வெற்றியீட்டியே நாடாளுமன்றம் செல்வேனேயன்றி, தேர்தலில் மக்கள் என்னை நிராகரித்தால் நான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு செல்லப்போவதில்லை எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்தகாலங்களில் இன்னொருவரின் வாக்குசீட்டுக்களை மோசடி செய்தே சுமந்திரன் நாடாளுமன்றம் சென்றதாக குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
Next Post
பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுமாறு இளைஞர்களுக்கு அறிவுறுத்தல்

பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுமாறு இளைஞர்களுக்கு அறிவுறுத்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு