147,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்தியவங்கி அறிவித்துள்ளது.
இதன்படி 91 நாட்கள் முதிர்வுக்காலத்தை கொண்ட 62,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக்காலத்தை கொண்ட 65,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் 364 நாட்கள் முதிர்வுக்காலத்தை கொண்ட 20,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஈழ விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வாங்கி அறிவித்துள்ளது.