Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேர்தல் விதிமுறைகளை மீறும் அரச அதிகாரிகள்; அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம்

தேர்தல் விதிமுறைகளை மீறும் அரச அதிகாரிகள்; அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம்

2 years ago
in செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அரச அலுவலர்களில் ஒரு பகுதியினர் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சட்ட முரணான விடயங்களில் ஈடுபட்டிருப்பதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்படுவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திணைக்கள தலைவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் உரிமைகளை அனுபவிக்க உரித்துடைய அலுவலர்கள் தகாத செல்வாக்கு மற்றும் இலஞ்சம் போன்ற சட்ட முரணான பழக்கங்களில் ஈடுபடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் வே.சிவராஜவினால், மன்னார் மாவட்டத்தில் உள்ள திணைக்கள தலைவர்கள், நிறுவனத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்படுகையில், “தாபன விதிக்கோவையின் அத்தியாயம் ‘XXXII’ இன் பிரிவின் 2 இன் கீழ் அரசியல் உரிமையை அனுபவிப்பதற்கு உரித்துடையவர்களான மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அலுவலர்களில் ஒரு பகுதியினர் நாடாளுமன்ற தேர்தல் – 2024 தொடர்பாக சட்ட முரணான பழக்கங்களில் ஈடுபட்டிருப்பதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

குறிப்பாக தமது கடமை நேரங்களில் அரசியல் பிரசாரங்களில் ஈடுபடுதல், தமது கடமை பரப்பெல்லை க்கு உட்பட்ட அலுவலகங்களிலும், கடமையாற்றும் கிராம அலுவலர் பிரிவுகளிலும் தமது சேவை நாடிகளான பொது மக்களிடம் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ள

இவ்வாறான கருமங்களில் ஈடுபடும் அலுவலர் ஒருவர் 1981 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 80 (ஆ) உறுப்புரையின் கீழ் தவறொன்றை இழைத் தவராக கருதப்படுவார்.

அலுவலர் ஒருவரின் பதவி வழியாக கடமை அதிகார எல்லை பிரதேசத்தில் அவரால் அரசியல் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது இவ்வாறான தவறொன்றாக அமையும் என்பது தொடர்பாக தமது நிர்வாகத்தின் கீழ் உள்ள அலுவலர்களுக்கு அறிவூட்டும்படி கேட்டுக் கொள்ளுகின்றேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
தமிழ் வாக்காளர்கள் தமது விருப்பு வாக்குகளைத் தமிழ் வேட்பாளர்களுக்கு மாத்திரம் வழங்குவது அத்தியாவசியமாகும்; மனோ கணேசன்

தமிழ் வாக்காளர்கள் தமது விருப்பு வாக்குகளைத் தமிழ் வேட்பாளர்களுக்கு மாத்திரம் வழங்குவது அத்தியாவசியமாகும்; மனோ கணேசன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு