எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எம்.தில்ஷான், தனது இரட்டைக் குடியுரிமையை துறக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய தில்ஷான், இலங்கை பாராளுமன்றத் தேர்தலுக்கு தகுதி பெறுவதற்காக தனது அவுஸ்திரேலிய குடியுரிமையை துறந்ததாக உறுதிப்படுத்தினார். “எனது வெற்றியைக் கண்டு பயந்து நான் எனது குடியுரிமையை கைவிடவில்லை என்று பல்வேறு நபர்கள் வதந்திகளைப் பரப்புகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவினால் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் கட்சியில் டில்ஷான் போட்டியிடுகிறார்.
நாட்டின் தேர்தல் சட்டங்களின்படி வேட்பாளர்கள் இலங்கைக் குடியுரிமையை மட்டுமே பெற்றிருக்க வேண்டும் என்பதால், டில்ஷான் அவரது தகுதி குறித்த சந்தேகங்களையும் தவறான தகவலையும் தெளிவுபடுத்தினார்.