Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்றைய வானிலை

இன்றைய வானிலை

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று இன்று உருவாகின்றது. இதன் தாக்கத்தின் காரணமாக நாளை முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படுகின்றது என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

வட மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

கிழக்கு, மத்திய, சப்ரகமுவ தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 கிலோமீற்றர் வேகத்தில் வடமேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன
செய்திகள்

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன

June 16, 2026
வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்
செய்திகள்

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்

June 16, 2026
ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!
செய்திகள்

ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!

June 16, 2026
கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை
செய்திகள்

கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை

June 16, 2026
காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!
செய்திகள்

காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!

June 16, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!

June 16, 2026
Next Post
உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு பிற்போடுமாறு உதய கம்மன்பில வலியுறுத்தல்

உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு பிற்போடுமாறு உதய கம்மன்பில வலியுறுத்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு