Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் பாலத்தில் போராட்டம்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் பாலத்தில் போராட்டம்

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் பாலத்தில் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் ஒருங்கிணைந்து செவ்வாய்கிழமை பாம்பன் பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை தமிழக மீனவர்களின் 66 படகுகளை சிறைப்பிடித்து, 497 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள், அந்நாட்டின் வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்யப்பபடுகிறது. இதில் 90 மீனவர்கள் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டு காலம் வரையிலும் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு வழங்கப்பட்டு இலங்கை சிறைகளில் தண்டனை கைதிகளாக உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 16 ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதும், ராமேசுவரத்தில் நடைபெற்ற விசைப்படகு மீனவப் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில், மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி நவம்பர் 12-ல் பாம்பன் பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும், என அறிவித்தனர். இந்த போராட்ட அறிவிப்புக்கு நாட்டுப்படகு மீனவ அமைப்புகளும் ஆதரவு அளித்தன. முன்னதாக திங்கட்கிழமை ராமேசுவரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் சாலை மறியல் போராட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மீனவப் பிரதிநிதிகளுடன் அரசு அதிகாரிகள் நடத்திய அமைதிக்குழு கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் மீனவர்கள் அறிவித்தபடியே இன்று (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணியளவில் பாம்பன் சாலைப் பாலம் துவங்கும் இடத்தில் மறியல் போராட்டம் துவங்கியது. இந்த சாலை மறியல் போராட்டத்தினால் ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. போராட்டம் துவங்கிய போது மீனவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே லேசான தள்ளு முள்ளும் ஏற்பட்டது.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.பாம்பனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் சுமார் ஐநூறு மீனவர்களும், பெண்களும் கொண்டனர்

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!
செய்திகள்

ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!

August 17, 2026
நுவரெலியாவில் கனமழை; நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு!
செய்திகள்

நுவரெலியாவில் கனமழை; நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு!

August 17, 2026
கைதான தனியார் வங்கிகளின் 04 முகாமையாளர்களும் விளக்கமறியலில்!
செய்திகள்

கைதான தனியார் வங்கிகளின் 04 முகாமையாளர்களும் விளக்கமறியலில்!

August 17, 2026
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே பொறுப்பேற்பு!
செய்திகள்

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே பொறுப்பேற்பு!

August 17, 2026
சிசிலி அருங்காட்சியகத்தில் ரூ.700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள அரிய ஓவியங்கள் கொள்ளை!
செய்திகள்

சிசிலி அருங்காட்சியகத்தில் ரூ.700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள அரிய ஓவியங்கள் கொள்ளை!

August 17, 2026
தன் உயிரை தியாகம் செய்து செல்ல நாயை காப்பாற்றிய பெண்; கொலம்பியாவில் நெகிழ்ச்சி சம்பவம்!
செய்திகள்

தன் உயிரை தியாகம் செய்து செல்ல நாயை காப்பாற்றிய பெண்; கொலம்பியாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

August 17, 2026
Next Post
இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும்; சீமான் வலியுறுத்து

இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும்; சீமான் வலியுறுத்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு