Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2027 வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச கால்நடை வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு!

2027 வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச கால்நடை வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு!

26 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தமக்கான கொடுப்பனவு அதிகரிப்புகள் மற்றும் நிவாரணங்கள் எதுவும் உள்ளடக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் இன்று (17) ஒருநாள் அடையாள சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் உபுல் ரஞ்சித் குமார இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச கால்நடை வைத்திய அலுவலகங்கள், மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் விலங்கு தனிமைப்படுத்தல் பிரிவுகள் உள்ளிட்ட கால்நடை வைத்தியர்கள் பணியாற்றும் அனைத்து இடங்களிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கால்நடை வைத்தியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு அல்லது ஏனைய சலுகைகள் தொடர்பில் எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்கத் தவறினால், எதிர்காலத்தில் மேலும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அத்துடன், 2027ஆம் ஆண்டுக்கான அபிவிருத்திப் பணிகளில் இருந்து விலகிக்கொள்ளவும் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர வீரசிங்க, இம்முறை வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக சமுர்த்தி துறைக்கு பல்வேறு நிவாரணங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், ரயில்வே சேவைக்கான தேவைகள் தொடர்பில் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என இலங்கை ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறை வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் ஜே.எம்.ஏ. பிரேமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தது மேஜிக் அல்ல; நிதி ஒழுக்கமே காரணம் – நளிந்த ஜயதிஸ்ஸ!
செய்திகள்

இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தது மேஜிக் அல்ல; நிதி ஒழுக்கமே காரணம் – நளிந்த ஜயதிஸ்ஸ!

November 17, 2026
கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அதிகாலை தீப்பரவல்!
செய்திகள்

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அதிகாலை தீப்பரவல்!

November 17, 2026
இந்தோனேசிய கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பா?
செய்திகள்

இந்தோனேசிய கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பா?

November 17, 2026
நாட்டில் முட்டை விலை சடுதியாக அதிகரிப்பு!
செய்திகள்

நாட்டில் முட்டை விலை சடுதியாக அதிகரிப்பு!

November 17, 2026
அக்வான் புயல் மேலும் வலுவடையும் அபாயம் – இலங்கையின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

அக்வான் புயல் மேலும் வலுவடையும் அபாயம் – இலங்கையின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

November 17, 2026
12 கோடி ரூபா இலஞ்சக் குற்றச்சாட்டு; சரித் அபேசிங்கவின் சொத்து மற்றும் சொகுசு வீடு முடக்கம்!
செய்திகள்

12 கோடி ரூபா இலஞ்சக் குற்றச்சாட்டு; சரித் அபேசிங்கவின் சொத்து மற்றும் சொகுசு வீடு முடக்கம்!

November 16, 2026
Next Post
இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தது மேஜிக் அல்ல; நிதி ஒழுக்கமே காரணம் – நளிந்த ஜயதிஸ்ஸ!

இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தது மேஜிக் அல்ல; நிதி ஒழுக்கமே காரணம் – நளிந்த ஜயதிஸ்ஸ!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு