Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகரையில் மின்சார சபைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

வாகரையில் மின்சார சபைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வாகரை மின்சார சபையின் அசமந்தப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (22) மக்கள் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வாகரை பிரதேச செயலக பிரிவில் உள்ள வாகரை, ஊரியன் கட்டு, தட்டு முனை, கதிரவெளி உள்ளிட்ட பல கிராமங்களில் நாளாந்தம் பல மணி நேரம் முன்னறிவித்தல் எதுவுமின்றி கடந்த இரண்டு மாதங்களாக மின்வெட்டினை மேற்கொள்வதால் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட கிராம பொது மக்களும் தமது நாளாந்த கடமைகள் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் சிரமப்படுவதாக தெரிவித்தே இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மின்சார சபையின் இச் செயற்பாட்டினால் பாடசாலை மாணவர்களின் பரீட்சை கால இரவு நேர கற்றல் நடவடிக்கை முற்றாக பாதிப்படைவதுடன், அவர்களது எதிர்காலம் பாதிப்படைய இது ஏதுவாக அமையுமென மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் “துண்டிக்காதே துண்டிக்காதே முன்னறிவித்தல் இன்றி மின்சாரத்தை துண்டிக்காதே”, “மின்சார சபையே மின்சார சபையே பாடசாலை மாணவர்களின் கல்விக்கு தடையாக இருக்காதே” போன்ற வாசகங்களை பொறித்த பதாதைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், தமக்கான தீர்வை பெற்றுத்தருமாறு வாகரை பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்த்தீபனிடம் மகஜரினை கையளித்ததனைத் தொடர்ந்தும், பிரதே செயலாளரின் வாக்குறியினை தொடர்ந்தும் ஆர்ப்பாட்டக் காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
அரிசி வழங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள சதொச

அரிசி வழங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள சதொச

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு