Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த “பெங்கால் ” சூறாவளியானது நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடங்களுக்கு இடையாக ஊடறுத்து உட்புகுந்துள்ளது. இது அடுத்துவரும் 3 மணித்தியாலங்களில் வலுவிழந்து மேற்கு – தென்மேற்குத் திசையினூடாக மெதுவாக நகர்ந்து செல்லும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இதன் காரணமாக நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கமானது மேலும் படிப்படியாக குறைவடைகின்றது. வட மாகாணத்தில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் வானம் முகில் செறிந்தும் காணப்படும்.

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, மத்திய வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு இழப்புகளை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களுக்கு செல்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இக் கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் வடமேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும் என்றார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை; மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாயம்!
செய்திகள்

கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை; மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாயம்!

July 30, 2026
சேவை துப்பாக்கியால் விபரீத முடிவு; 28 வயது காவலரின் மரணம் குறித்து வெளியான தகவல்!
செய்திகள்

சேவை துப்பாக்கியால் விபரீத முடிவு; 28 வயது காவலரின் மரணம் குறித்து வெளியான தகவல்!

July 30, 2026
கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் செயலாளர் நீதிமன்றில் முன்னிலை!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் செயலாளர் நீதிமன்றில் முன்னிலை!

July 30, 2026
வவுனியாவில் மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகனம் விபத்து; இரு உயிர்கள் பறிப்பு!
செய்திகள்

வவுனியாவில் மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகனம் விபத்து; இரு உயிர்கள் பறிப்பு!

July 30, 2026
13 வயது சிறுமி துஷ்பிரயோக வழக்கு; தந்தையின் நெருங்கிய நண்பர் கைது!
செய்திகள்

13 வயது சிறுமி துஷ்பிரயோக வழக்கு; தந்தையின் நெருங்கிய நண்பர் கைது!

July 30, 2026
பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பாலித்த பண்டார சாதனை!
செய்திகள்

பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பாலித்த பண்டார சாதனை!

July 30, 2026
Next Post
வடகிழக்கு நினைவேந்தலை வைத்து இனவாதம் தூண்டிய அமைச்சர்களுக்கு அரச தரப்பு பதிலடி

வடகிழக்கு நினைவேந்தலை வைத்து இனவாதம் தூண்டிய அமைச்சர்களுக்கு அரச தரப்பு பதிலடி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.