Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க மறுத்த கிராம சேவகர்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க மறுத்த கிராம சேவகர்

2 years ago
in செய்திகள்

வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்திலிருந்த குடும்பங்கள் சிலவற்றிற்கு கிராம சேவகர் உணவு வழங்காமையால் நேற்று (01) ஞாயிற்றுக்கிழமை கற்கோவளம் கிராம மக்களுக்கும், கற்கோவளம் கிராம அலுவலருக்கும் இடையே வாய்த்தர்க்கம் இடம்பெற்ற நிலையில், தனது கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்று கற்கோவளம் கிராம சேவகர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடு காரணமாக நேற்றையதினம் இருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கற்கோவளம் கிராம சேவகரால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று காலை போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதில் தமது வீட்டில் மழை வெள்ளம் தேங்கியதால் தாம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்ததாகவும், அங்கு கிராம சேவகர் வேண்டுமென்று தம்மை புறக்கணித்து தமக்கு உணவு வழங்கவில்லை என்றும், இதனை கிராம சேவகரிடம் கேட்டமையாலேயே கிராம சேவகரது கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்று தெரிவித்து கிராம சேவகர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டனர் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலரிடம் கேட்டபோது பக்கச்சார்பற்ற விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கை ஏடுக்கப்படும் என்று தெரிவித்ததுடன், ஏதாவது முறைகேடுகள் இடம்பெற்றால் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் நிலைமைகளை பேசி தீர்த்துவைத்ததுடன், உரியவர்கள் மீது பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!
செய்திகள்

துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!

August 5, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!

August 5, 2026
கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்
சினிமா

கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்

August 5, 2026
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு
செய்திகள்

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு

August 5, 2026
Next Post
டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை தேடும் நாடுகள்; அமெரிக்கா எச்சரிக்கை

டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை தேடும் நாடுகள்; அமெரிக்கா எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு