‘கஜினி’, ‘லகான்’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்ற பிரபல மூத்த நடிகர் பிரதீப் ராவத் தனது 74ஆவது வயதில் காலமானார்.
புற்றுநோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (04) மாலை அவர் உயிரிழந்ததாக அவரது மேலாளர் சித்தார் திவாரி உறுதிப்படுத்தினார்.
மகாபாரதம் தொலைக்காட்சித் தொடரில் ‘அஸ்வத்தாமா’ கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற பிரதீப் ராவத், இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் மிரட்டலான வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.








