Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை தேடும் நாடுகள்; அமெரிக்கா எச்சரிக்கை

டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை தேடும் நாடுகள்; அமெரிக்கா எச்சரிக்கை

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், டாலருக்கு மாற்று வழியைத் தேடும் விவகாரம் குறித்து பிரிக்ஸ் (BRICS) நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை கண்டுபிடிக்க முயற்சிக்கும் பிரிக்ஸ் நாடுகள் மீது, 100 சதவிகித வரியை (இறக்குமதி வரி) விதிக்கப் போவதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டிரம்ப் சனிக்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில், “டாலரை விட்டு விலகும் பிரிக்ஸ் நாடுகளின் முயற்சிகளுக்கு நாங்கள் மௌனம் காத்த காலம் முடிந்துவிட்டது,” என்றார்.

“இந்த நாடுகள் புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கவோ அல்லது சக்தி வாய்ந்த அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறொரு நாணயத்தை முன்னிறுத்துவதையோ ஆதரிக்க மாட்டோம். அப்படி நடந்தால், 100 சதவிகித வரியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை முன்னிறுத்த முயற்சிக்க மாட்டோம் என்ற உறுதிமொழி எங்களுக்குத் தேவை.” என டிரம்ப் தெரிவித்தார்.

மேலும், “பிரிக்ஸ் நாடுகள் வேறு நாணயத்தை முன்னிறுத்தினால், அற்புதமான அமெரிக்கப் பொருளாதாரத்தில் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் இருந்து விடைபெற வேண்டும். அவர்கள் வேறு நாட்டில் விற்பனை செய்து கொள்ளலாம். சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை மாற்றுவது பிரிக்ஸ் கூட்டமைப்பால் முடியாது. அவ்வாறு செய்யும் எந்த நாடும் அமெரிக்காவிடம் இருந்தும், அனைத்து வர்த்தகத்தில் இருந்தும் விடைபெற வேண்டும்” என்று அவர் பதிவிட்டார்.

அதேசமயம் பிரிக்ஸ் (BRICS) என்பது பிரிக் நாடுகளுடன் தென்னாப்பிரிக்காவையும் சேர்த்து 2010ல் உதயமாகிய ஐந்து வளரும் நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பாகும். பிரேசில், உருசியா, இந்தியா, சீன மக்கள் குடியரசு மற்றும் தென்னாப்பிரிக்க ஆகியவை இதன் உறுப்பு நாடுகளாகும்.

Tags: BattinaathamnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!
செய்திகள்

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!

August 5, 2026
நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!
செய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!

August 5, 2026
அகில விராஜ் காரியவசம் கைது!
செய்திகள்

அகில விராஜ் காரியவசம் கைது!

August 5, 2026
நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!
செய்திகள்

துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!

August 5, 2026
Next Post
இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.