Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாசி சம்பலில் அதிகளவான பென்சோமிக் அமிலத்தை கலந்து விற்பனை; அக்கரைப்பற்றில் இருவருக்கு தண்டம்

மாசி சம்பலில் அதிகளவான பென்சோமிக் அமிலத்தை கலந்து விற்பனை; அக்கரைப்பற்றில் இருவருக்கு தண்டம்

2 years ago
in செய்திகள்

மாசிச் சம்பலில் 230 மில்லி கிராம் பென்சோமிக் அமிலப் பதார்த்தத்தை கலந்து விற்பனை செய்த விற்பனையாளர் மற்றும் உற்பத்தியாளருக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் தலா பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு நேற்றுவெள்ளிக்கிழமை (06) உத்தரவிட்டு அவர்களுக்கு கடுமையாக எச்சிரிக்கை விடுவித்தார்.

அக்கரைப்பற்று கடற்கரை வீதியிலுள்ள கடை ஒன்றை முற்றுகையிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அங்கு பிளாஸ்ரிக் கப் ஒன்றில் விற்பனைக்காக அடைத்து வைத்திருந்த மாசி சம்பலை கைப்பற்றி அதனை அரச உணவு பகுப்பாய்வு திணைக்களக்திற்கு அனுப்பியதையடுத்து அதில் அளவுக்கு அதிகமாக மனித பாவனைக்கு கேடுவிளைவிக்க கூடிய (230 மில்லிக்கிராம்) பென்சோமிக் அமிலப் பதார்தம் கலந்துள்ளதாக பகுப்பாய்வு திணைக்களம் அறிவித்தது.

இதனையடுத்து குறித்த மாசி சம்பலை விற்பனை செய்த கடை உரிமையாளர் மற்றும் இதனை உற்பத்தி செய்து வழங்கிய கல்முனையைச் சேர்ந்த அதன் உரிமையாளர் ஆகிய இருவருக்கும் எதிராக 1980ம் ஆண்டின் 26ம் இலக்க உணவுக் கட்டளைச் சட்டத்தின்பிரிவு 13(1) இன் கீழ் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர்கள் வழக்கு தாக்கல் செய்தனர்

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் இந்த வழக்கு இன்று (06) திகதி விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது இந்த இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 20 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டு, எதிர்காலத்தில் இனிமேல் இது போன்ற குற்றங்கைளை மீளவும் செய்தால், உற்பத்தி உரிமம் இரத்துச் செய்யப்படும் என குற்றவாளிகளை நீதவான் கடுமையாக எச்சரித்து விடுவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரான் போரால் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணை கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல்!
உலக செய்திகள்

ஈரான் போரால் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணை கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல்!

August 5, 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!
செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!

August 5, 2026
மினுவாங்கொடையில் ரூ.50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!
செய்திகள்

மினுவாங்கொடையில் ரூ.50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

August 5, 2026
மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும்; ஜனாதிபதி
செய்திகள்

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும்; ஜனாதிபதி

August 5, 2026
இரத்மலானையில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!
செய்திகள்

இரத்மலானையில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

August 5, 2026
கடுவலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு; பொலிஸார் விசாரணை
செய்திகள்

கடுவலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு; பொலிஸார் விசாரணை

August 5, 2026
Next Post
சிறுவர்களை பயன்படுத்த தடை; அடுத்த வருடம் முதல் அமுலில்

சிறுவர்களை பயன்படுத்த தடை; அடுத்த வருடம் முதல் அமுலில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு