Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிளிநொச்சியில் இளம் பெண்ணை கடத்திய கும்பல்; பொலிஸார் விசாரணை

கிளிநொச்சியில் இளம் பெண்ணை கடத்திய கும்பல்; பொலிஸார் விசாரணை

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இரணைமடுச் சந்தி கனகாம்பிகைக்குளம் வீதியில் வைத்து இளம் பெண்ணொருவர் நேற்று (16) மாலை 6 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் புன்னாக்லைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய குறித்த யுவதி, கிளிநொச்சியிலுள்ள அழகுக்கலை நிலையம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் நிலையில், கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில் வழமை போன்று குறித்த யுவதி கற்கைநெறியை முடித்துவிட்டு, தான் தங்கியிருக்கும் இடத்துக்கு திரும்புகையில், வான் ஒன்றில் சென்ற குழுவினர் அந்தப் பெண்ணை கடத்திச் சென்றுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த யுவதியின் கைப்பை மற்றும் தொலைபேசி ஆகியன கண்டெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் சமரவிக்ரம தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த யுவதியை கடத்திச் சென்றவர் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் யுவதியின் முன்னாள் காதலன் என்றும் தெரியவந்துள்ளது. அவர் யுவதியை, யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளதாக தகவல் ஒன்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் கடத்திச் செல்லப்பட்ட யுவதி திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தவேளை, யுவதியின் நண்பியை அழைத்த குறித்த குழு அந்த யுவதியை நண்பியின் கையில் பாரப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இந்நிலையில் அந்த நண்பி குறித்த யுவதியை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்து பரிசோதனைக்காக அந்த யுவதி வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026
நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!
செய்திகள்

நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!

September 20, 2026
அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!
செய்திகள்

அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!

September 20, 2026
Next Post
கடின பந்து கிரிக்கெட் போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி வெற்றி

கடின பந்து கிரிக்கெட் போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி வெற்றி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு