நேற்று (21) இரவு மட்டக்களப்பு, மாமாங்கம் பிரதான வீதியில் விபத்திற்குள்ளாகி, ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மாமாங்கம் பாடசாலை வீதியை சேர்ந்த 26 வயதுடைய R.சுபீட்சன் என்னும் இளைஞனே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரனைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.