Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மகிந்த ராஜபக்சவுக்கு 100 அல்ல 1000 இராணுவத்தினரை பாதுகாப்புக்கு அமர்த்தினாலும் தவறில்லை;பொதுஜன பெரமுன

மகிந்த ராஜபக்சவுக்கு 100 அல்ல 1000 இராணுவத்தினரை பாதுகாப்புக்கு அமர்த்தினாலும் தவறில்லை;பொதுஜன பெரமுன

2 years ago
in செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறான பின்னணியில் இராணுவ பாதுகாப்பை இந்த அரசாங்கம் முழுமையாக நீக்கியுள்ளமை தவறான தீர்மானமாகும் என்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

மேலும், மகிந்த ராஜபக்சவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் இந்த அரசாங்கம்தான் ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் (23) நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

பிரபுக்களின் (பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியவர்கள் ) பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு தரப்பினரிடம் அறிக்கை பெற்றுக் கொண்டுள்ளது.

இதற்கமைய 2024.10.10 ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.டி.விக்ரமசிங்க மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

அந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறித்து புலனாய்வு பிரிவினர் சமர்ப்பித்த 13 அறிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட 04 புலனாய்வு பிரிவின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு ஏன் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான காரணிகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் ட்ரோன் கருவி ஊடான குண்டுத்தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும், அத்துடன் அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அரச சார்பற்ற அமைப்புக்களினால் திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் புலனாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு பிரிவு சமர்ப்பித்த அறிக்கைகளை கவனத்திற் கொள்ளாமல் அரசாங்கம் முறையற்ற வகையில் இராணுவ பாதுகாப்பை முழுமையாக நீக்கியுள்ளது.

மகிந்த ராஜபக்சவுக்கு 100 அல்ல 1000 இராணுவத்தினரை பாதுகாப்புக்கு அமர்த்தினாலும் குறையேதுமில்லை. ஏனெனில் இராணுவத்தினர் தமது சொந்த ஊருக்கு சவப்பெட்டியில் செல்லும் காலத்தை அவர் தான் முடிவுக்கு கொண்டு வந்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் மகிந்த ராஜபக்சவை ஒப்பிட முடியாது. ஏனெனில் மகிந்த ராஜபக்ச தேசியத்தை பாதுகாப்பதற்காக கடுமையான தீர்மானங்களை எடுத்தார்.

ஆகவே மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக பிரிவினைவாத சக்திகள் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் இன்றும் செயற்படுகின்றன. மகிந்த ராஜபக்சவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அரசாங்கம் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சிலையை உடைக்கலாம்; திலீபனின் நினைவுகளை அழிக்க முடியாது – டி.ராஜேந்தர்
செய்திகள்

சிலையை உடைக்கலாம்; திலீபனின் நினைவுகளை அழிக்க முடியாது – டி.ராஜேந்தர்

September 27, 2026
அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்
செய்திகள்

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

September 27, 2026
பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்
செய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்

September 27, 2026
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு

September 27, 2026
யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸார்
செய்திகள்

யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸார்

September 27, 2026
லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு
உலக செய்திகள்

லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு

September 27, 2026
Next Post
பிணையில் சென்ற குடு சலிந்துற்கு பிடியாணை உத்தரவு

பிணையில் சென்ற குடு சலிந்துற்கு பிடியாணை உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.