Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு மேலும் குறைக்கப்படும்; கிருஷாந்த அபேசேன

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு மேலும் குறைக்கப்படும்; கிருஷாந்த அபேசேன

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என்ற புலனாய்வு அறிக்கையின் பின்னரே அவர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டது. அடுத்த மீளாய்வு புலனாய்வு அறிக்கை கிடைத்தப் பிறகு தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மேலும் குறைக்கப்படலாம் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு சந்தையில் நிலவும் தட்டுப்பாடுகளுக்கு தீர்வு காணப்படும்.

அரசியலில் இருந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் போலியான பல குற்றச்சாட்டுக்களை தற்போது முன்வைக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தலும் கிடையாது என்று புலனாய்வு அறிக்கை கிடைத்ததன் பின்னரே வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு மீளப் பெறப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 60 பொலிஸார் என்ற அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த மீளாய்வு அறிக்கையில் பாதுகாப்பு மேலும் குறைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டால் வழங்கப்பட்டுள்ள 60 பொலிஸாரின் பாதுகாப்பை 30 ஆக குறைக்கலாம்.

மக்களின் வரிப்பணத்தை வீண் விரயம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

முன்னாள் ஜனாதிபதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் என்று ஊடகங்களில் குறிப்பிட்ட தரப்பினர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான தகவல்களை பாதுகாப்பு தரப்புக்கு அளிக்க வேண்டும். அப்போதுதான் அது குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
ஐ.சி.சி விருதுக்காக வனிந்து ஹசரங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை

ஐ.சி.சி விருதுக்காக வனிந்து ஹசரங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு