Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பலாங்கொட கஸ்ஸப தேரரின் சர்ச்சைக்குரிய உரை; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

பலாங்கொட கஸ்ஸப தேரரின் சர்ச்சைக்குரிய உரை; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

1 hour ago
in செய்திகள்

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படும் பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கறுவாகாடு பொலிஸார் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைமையக அமைப்பாளர் ஜகத் பஸ்நாயக்க அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினர் விகாரமஹாதேவி பூங்காவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கஸ்ஸப தேரர், இரு கத்திகளுடன் இருவர் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்ததாகவும், அவர்கள் பெலவத்தையில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டவர்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

எனினும், இந்தக் கூற்று பொய்யானது என்றும், பொதுமக்களைத் தவறாக வழிநடத்தக்கூடியது என்றும் பொலிஸார் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 98ஆவது பிரிவின் கீழ் பொய்யான தகவல்களைப் பரப்புவது தொடர்பான சட்ட ஏற்பாடுகளையும் குறிப்பிட்ட பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக ஊடக நிறுவனங்களிடமிருந்து தொகுக்கப்படாத காணொளிப் பதிவுகளைப் பெற்றுக்கொள்ள நீதிமன்ற உத்தரவை கோரியுள்ளனர்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம, குறித்த உரை தொடர்பான தொகுக்கப்படாத காணொளிப் பதிவுகளைப் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை விரைவாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு இந்தியக் கடற்பரப்பில் தஞ்சமடைய அனுமதி!
செய்திகள்

இலங்கையின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு இந்தியக் கடற்பரப்பில் தஞ்சமடைய அனுமதி!

October 27, 2026
வெள்ள அனர்த்தத்தால் அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கு மாற்றுத் திகதி!
செய்திகள்

வெள்ள அனர்த்தத்தால் அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கு மாற்றுத் திகதி!

October 27, 2026
அதிநவீன வாகனங்களில் பயணிக்கும் ஆசை துறந்த தேரர்கள்!
செய்திகள்

அதிநவீன வாகனங்களில் பயணிக்கும் ஆசை துறந்த தேரர்கள்!

October 27, 2026
தொடருந்துடன் மோதிய பேருந்து; மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து!
செய்திகள்

தொடருந்துடன் மோதிய பேருந்து; மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து!

October 27, 2026
இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கையில் தேடப்பட்ட ‘அச்சினி’ ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது!
செய்திகள்

இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கையில் தேடப்பட்ட ‘அச்சினி’ ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது!

October 27, 2026
மின்சார கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்!
செய்திகள்

மின்சார கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்!

October 27, 2026
Next Post
அதிநவீன வாகனங்களில் பயணிக்கும் ஆசை துறந்த தேரர்கள்!

அதிநவீன வாகனங்களில் பயணிக்கும் ஆசை துறந்த தேரர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு