Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அதிநவீன வாகனங்களில் பயணிக்கும் ஆசை துறந்த தேரர்கள்!

அதிநவீன வாகனங்களில் பயணிக்கும் ஆசை துறந்த தேரர்கள்!

45 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தன்னை அரஹந்தர் எனக் கூறும் சிறி சமந்தபத்ர தேரர், சுமார் 3 கோடியே 25 இலட்சம் ரூபாய் பெறுமதியானதாகக் கூறப்படும் சொகுசு வாகனத்தில் பயணிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி வெளியான இந்தக் காணொளியைத் தொடர்ந்து, தேரரின் வாழ்க்கை முறை மற்றும் பௌத்த பிக்குகளின் ஒழுக்க நெறிகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறித்த வாகனத்தில் நவீன வசதிகளுடன் கூடிய தோல் இருக்கைகள், LED விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றன. நீண்ட தூரப் பயணங்களின்போது கால்களில் ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்கும் நோக்கில் வாகனத்தின் இருக்கை வசதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தேரர் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இருக்கை வசதிகளை மேம்படுத்துவதற்காக மாத்திரம் 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டதாகவும் காணொளியில் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், வாகனத்தின் உரிமை மற்றும் அதன் பெறுமதி தொடர்பான தகவல்கள் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

குருநாகல், மெல்சிறிபுர பகுதியில் அமைந்துள்ள ‘உமந்தாவ’ பௌத்த கிராமத்தை உருவாக்கிய சமந்தபத்ர தேரர், அங்கு அரிசி, வாசனைப் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.

இதற்கு முன்னரும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அவரது பிறந்தநாள் நிகழ்வின்போது லூயி விட்டன் மற்றும் ஃபெண்டி போன்ற ஆடம்பர வர்த்தக நாமங்களைக் கொண்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டமை தொடர்பில் சர்ச்சைகள் எழுந்திருந்தன.

இந்நிலையில், பௌத்த பிக்குகள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகள், துறவற வாழ்க்கை மற்றும் ஆடம்பர வசதிகளைப் பயன்படுத்துவது தொடர்பான விவாதங்கள் மீண்டும் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளன.

மேலும், கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி சமந்தபத்ர தேரர் மல்வத்து மகா விகாரைக்கு அழைக்கப்பட்டு, ஊடகங்களில் தோன்றும் விதம் உள்ளிட்ட சில செயற்பாடுகள் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சமந்தபத்ர தேரரின் ஆன்மிகக் கொள்கைகள் மற்றும் அவர் தொடர்பாக வெளியாகியுள்ள ஆடம்பர வாழ்க்கை முறை குறித்த தகவல்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு இந்தியக் கடற்பரப்பில் தஞ்சமடைய அனுமதி!
செய்திகள்

இலங்கையின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு இந்தியக் கடற்பரப்பில் தஞ்சமடைய அனுமதி!

October 27, 2026
வெள்ள அனர்த்தத்தால் அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கு மாற்றுத் திகதி!
செய்திகள்

வெள்ள அனர்த்தத்தால் அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கு மாற்றுத் திகதி!

October 27, 2026
பலாங்கொட கஸ்ஸப தேரரின் சர்ச்சைக்குரிய உரை; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
செய்திகள்

பலாங்கொட கஸ்ஸப தேரரின் சர்ச்சைக்குரிய உரை; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

October 27, 2026
தொடருந்துடன் மோதிய பேருந்து; மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து!
செய்திகள்

தொடருந்துடன் மோதிய பேருந்து; மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து!

October 27, 2026
இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கையில் தேடப்பட்ட ‘அச்சினி’ ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது!
செய்திகள்

இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கையில் தேடப்பட்ட ‘அச்சினி’ ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது!

October 27, 2026
மின்சார கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்!
செய்திகள்

மின்சார கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்!

October 27, 2026
Next Post
வெள்ள அனர்த்தத்தால் அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கு மாற்றுத் திகதி!

வெள்ள அனர்த்தத்தால் அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கு மாற்றுத் திகதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு