வவுனியா, பாவற்குளம் பகுதியில் சைக்கிள் ஒன்றின் மீது தனியார் பேருந்து மோதியதில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது,நேற்று (31) மாலை இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பாவற்குளம், படிவம் 2 பகுதியில் பேருந்து சாரதி பேருந்தை நிறுத்தி விட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுவதற்காக பேருந்தை செலுத்தியுள்ளார்.
அப்போது, சைக்கிளில் பயணித்த இரண்டு சிறுவர்கள் வீதியை கடக்க முற்பட்டபோது பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்கள்.
இதில் சைக்கிளில் பயணித்த 7 வயதுடைய அப்துல் மஜித் உமர் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் உளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.