அநுராதபுரம் – மதவாச்சி வீதியின் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 50இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதைத் தொடர்ந்து, அவற்றில் ஒரு பேருந்துடன் தனியார் பேருந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








