மாத்தறை – கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 18 ஏக்கர் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (09) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், தெவிநுவர பகுதியைச் சேர்ந்த சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவனுக்கும் மற்றுமொரு குழுவினருக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த தனிப்பட்ட முரண்பாடே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தர பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.







