இந்தோனேசியாவுக்கு அருகிலுள்ள பெண்டா தீவை அண்மித்த கடற்பகுதியில் இன்று (21) பிற்பகல் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.12 மணியளவில், பூமிக்கு அடியில் சுமார் 156 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
எனினும், குறித்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகள் பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அவுஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளிலும் உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சொத்துச் சேதங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
குறிப்பாக, பெண்டா தீவை அண்மித்த பகுதியில் அண்மைக்காலத்திலும் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமொன்று பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







