கொழும்பு புளூமெண்டல் (Bluemendhal) எரிபொருள் களஞ்சிய முனையத்தில் இன்று (21) காலை டீசல் கசிவு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கசிந்த டீசல் வடிகால் கட்டமைப்பினூடாக வெளியேறியதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் வாளிகள் மற்றும் கேன்களுடன் அங்கு திரண்டு டீசலைச் சேகரித்துள்ளனர்.
இதனால் குறித்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.







