Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காற்றாலை மின்சார திட்டத்திற்காக பிடுங்கி எறியப்பட்ட மரங்கள்; மன்னார் மக்கள் விசனம்

காற்றாலை மின்சார திட்டத்திற்காக பிடுங்கி எறியப்பட்ட மரங்கள்; மன்னார் மக்கள் விசனம்

2 years ago
in செய்திகள்

பலன் தரும் மரங்ளை வேரோடு பிடுங்கி எரிந்ததால் மக்கள் விமர்சனம்

மன்னார்- தாழ்வுபாடு பகுதியில் காற்றாலை மின்சாரத்திற்கான கடற்கரை வீதி புனரமைப்பு வேலை திட்டத்தின் போது பலன் தரும் மரங்கள் வேரோடு பிடுங்கி வீசப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்திற்கு எதிராக நேற்று முன்தினம் (02) அந்த பகுதியில் ஒன்று கூடிய மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

தாழ்வுபாடு கடற்கரையில் அமைந்துள்ள மணல் திட்டுகளில் மணல் எடுக்கப்பட்டு வீதியின் அருகில் கொட்டப்பட்டுள்ளமை தொடர்பில் கிராமத்தின் முக்கியஸ்தர்கள் மன்னார் பிரதேசச் செயலாளர், மன்னார் பிரஜைகள் குழு மற்றும் அருட்தந்தையர்களின் கவனத்திற்கு மக்கள் கொண்டு வந்திருந்தனர்.

இந்த நிலையில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் மற்றும் அருட்தந்தையர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை அவதானித்ததோடு, உடனடியாக குறித்த வேலைத்திட்டத்தை இடை நிறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் சம்பவ இடத்திற்குச் சென்று நிலமையை ஆராய்ந்துள்ளார்.

இதன்போது, குறித்த பகுதியில் மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டுள்ள நிலையில் கடற்கரை மணல் திட்டுகள் ஜே.சி.பி. இயந்திரத்தினால் அகழப்பட்டு வீதிக்கு அருகில் கொட்டப்பட்டுள்ள நிலையில் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் காற்றாலை மின்சாரம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்பாகவே குறித்த வீதி புனரமைக்கப்படுவது குறித்தும் மக்கள் இதன்போது விசனம் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பிரதேச செயலாளர் எம். பிரதீப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை(3) இடம் பெற உள்ள மன்னார் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் குறித்த சம்பவம் தொடர்பில் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அங்கு வருகை தந்தவர்கள் திரும்பிச் சென்றதோடு, குறித்த வேலைத்திட்டமும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!

September 17, 2026
மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!
செய்திகள்

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

September 17, 2026
மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 17, 2026
டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு
செய்திகள்

டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு

September 17, 2026
நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

September 17, 2026
Next Post
மட்டக்களப்பில் வெள்ளிமலை கலாச்சார பண்பாட்டு மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வு

மட்டக்களப்பில் வெள்ளிமலை கலாச்சார பண்பாட்டு மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு