Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி யாழிற்கு விஜயம்

கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி யாழிற்கு விஜயம்

2 years ago
in செய்திகள்

கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி யாழிற்கு விஜயம் செய்துள்ளார்.

கனடாவின் முதலாவது ஈழத்தமிழ் அரசியல்வாதியாகவும் மற்றும் கனடிய நாடாளுமன்றத்தில் இரண்டாவது ஈழத்தமிழ் அமைச்சராகவும் காணப்படுகின்ற ஹரி ஆனந்த சங்கரியின் குறித்த இலங்கை விஜயம் முக்கியமான விடயமாக பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் வடக்கு அரசியல் குறித்து தொடர்ச்சியான அரசியல் வட்டாரங்களில் தொடர் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவரின் வருகை அதில் எந்தவகையிலாவது தாக்கத்தை ஏற்படுத்துமா என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

முடிக்குரிய பூர்வீகக் குடிகள் உறவுகளுக்கான அமைச்சராக இருந்த ஹரி ஆனந்தசங்கரிக்கு அண்மையில், அமைச்சுப் பொறுப்பும், வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கு பொறுப்பான அமைச்சுப் பொறுப்பும் மேலதிகமாக வழங்கப்பட்டது.

இலங்கையில் தமிழர்களுக்கு நடைபெற்றது இனப்படுகொலை என கனேடிய நாடாளுமன்றத்தில் மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது மாத்திரமன்றி இனப்படுகொலை புரிந்த மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியவர்களுக்கு பொருளாதார மற்றும் பயணத்தடை விதிக்க வழிவகுத்தார்.

இந்தநிலையில், ஹரி ஆனந்தசங்கரியின் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசாவை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் மறுத்திருந்தது. இது தொடர்பில் தனது, எக்ஸ் தளத்தில் ஹரி ஆனந்த சங்கரி பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

குறித்த பதிவில், “அரசாங்கத்திற்கு ஏற்றதாக காணப்படும் போதே கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது. கொடும்பாவிகளை எரிப்பது இலங்கையின் அரசாங்கங்களின் தவறுகளை சரி செய்யாது.

கவலையளிக்கும் விதத்தில் இலங்கை எனக்கு விசா வழங்க மறுத்துவிட்டது.

நாங்கள் முன்னெடுத்துள்ள வேலைதிட்டத்திற்காக பழிவாங்கும் நடவடிக்கை இது. எங்களை மௌனமாக்க முடியாது” என அவர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பிண்ணனியில் தற்போது இவரது இலங்கை விஜயம் இடம்பெற்றிருக்கின்ற நிலையில் அரசியல் வட்டாரங்கள் இடையே பாரிய பேசுபொருளாக மாறியுள்ளதுடன் ஹரி ஆனந்த சங்கரிக்கும் பிரபல தொழிலதிபரும் ஐபிசி குழுமத் தலைவருமான கந்தையா பாஸ்கரனுக்கும் இடையிலும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மேலும், அண்மையில் கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சிறீதரன், அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!
செய்திகள்

சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!

August 1, 2026
மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு
செய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு

August 1, 2026
“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு
செய்திகள்

“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு

August 1, 2026
Next Post
ஐக்கிய மக்கள் சக்தி-ஐக்கிய தேசியக் கட்சி; இணையும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி-ஐக்கிய தேசியக் கட்சி; இணையும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.