Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முடிந்தால் செய்து காட்டுங்கள் இல்லையேல் நீங்களும் குற்றவாளிகள்தான்; அரசுக்கு சவால் விடுத்துள்ள சுமந்திரன்

முடிந்தால் செய்து காட்டுங்கள் இல்லையேல் நீங்களும் குற்றவாளிகள்தான்; அரசுக்கு சவால் விடுத்துள்ள சுமந்திரன்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், உடுப்பிட்டி மதுபானசாலை ஏன் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு சாட்சியமளிப்பு இடம்பெற்று வருகிறது.

நாட்டிலே அதிகரித்த மதுபானசாலைகள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளது. அதிகரித்த மதுபான பாவனையால் நேற்றும் பருத்தித்துறையில் வாள்வெட்டு,கத்திக் குத்து இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் இன்று (16) நீதிமன்றின் முன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறான நிலை நாட்டிற்கு நல்லதல்ல.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக கடந்தகாலத்தில் பார் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இலஞ்சத்தை ஒழிப்போம், பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை.

இவர்களும் இலஞ்சத்துக்கு துணை போனவர்களாகத்தான் பார்க்க முடியும். நாம் சவால் விடுகிறோம், முடிந்தால் பார் லைசன்ஸ் விவகாரத்தை உடன் வெளியிடுங்கள் இல்லையேல் நீங்களும் ஊழல்வாதிகள் தான்.

மேலும் இலங்கை விடயம் சம்மந்தமாக தி.மு.க கனிமொழியுடன் சந்திப்பை நடத்தியிருந்தோம். மத்திய அரசில் தமிழ் மக்கள் தொடர்பில் கரிசனை குறைந்துள்ளது.

இலங்கை தமிழர்கள் தீர்வு விடயத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு மூன்று ஆண்டுகள் தேவை என்று கூறுகிறது. அவ்வாறு தேவையில்லை. ஏற்கனவே இணங்கிக் கொண்ட விடயம் எனவே இவ்வளவு காலம் தேவையில்லை. காலத்தை இழுத்தடிப்பது அதை இல்லாமல் செய்வதற்கான ஒரு திட்டம்.

தமிழரசு தலைமை தொடர்பிலும் புதிய அரசியல் அமைப்புத் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சி.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் பேசிவருகின்ற விடயம் மற்றும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் எதிர்வரும் 18ம் திகதி மத்திய குழு கூட்டத்தில் பேசி முடிவெடுப்போம்” என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!
செய்திகள்

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!

August 5, 2026
நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!
செய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!

August 5, 2026
அகில விராஜ் காரியவசம் கைது!
செய்திகள்

அகில விராஜ் காரியவசம் கைது!

August 5, 2026
நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
Next Post
அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் பொலிஸாரின் தெளிவூட்டல்

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் பொலிஸாரின் தெளிவூட்டல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு