Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலிபாய்ந்த கல் பாதையின் நீர்மட்டம் அதிகரிப்பு; கிரான் தெற்கு பிரதேச செயலகம் மக்களுக்காக கோரகல்லிமடுவிற்கு மாற்றம்

புலிபாய்ந்த கல் பாதையின் நீர்மட்டம் அதிகரிப்பு; கிரான் தெற்கு பிரதேச செயலகம் மக்களுக்காக கோரகல்லிமடுவிற்கு மாற்றம்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிரான் பிரதேச செயலகப் பிரிவில் புலிபாய்ந்த கல் பாதை நீர்மட்டம் உயர்ந்து இருப்பதால் அந்தப் பாதையூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மாவட்டத்தின் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதனாலும், பருவப் பெயர்ச்சி மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் குடும்பிமலை, புலிபாய்ந கல் திகிலிவெட்டை, கோராவெளி, பெண்டுகள் சேனை, சாராவெளி, முறுத்தானை போன்ற கிராமங்கள் உட்பட பல்வேறு கிராமசேவாகர் பிரிவுகளில் வாழும் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிரான் புலிபாந்த கல் வீதியில் குறிப்பிட்ட அளவு சுமார் 300 மீற்றர் தூரம் வரை மக்கள் வெள்ள நீரோட்டம் ஊடாக கால் நடையாக நடந்து சென்று தங்களது பொருட்களை சுமந்து, அப்பாலுள்ள படகு சேவை இடம்பெறும் இடத்தை அடைந்து, அங்கிருந்து தமது போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இவ் படகுசேவையினை கிரான் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ளது.

சந்திவெளி துறை ஊடான போக்குவரத்திற்கான படகு சேவை கோறளைப்பற்று பிரதேச சபை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் ஏற்கனவே பாதை ஊடாக அச்சமின்றி தங்ளது பயணங்களை மேற்கொண்டிருந்தனர். தற்போது குறித்த பாதை பழுதடைந்துள்ளதால் படகில் தங்களது போக்குவரத்தினை மேற்கொள்வதில் அச்சநிலை உள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ் மக்கள் திகிலிவெட்டை, குடும்பிமாலை போன்ற அயல் கிராமங்களுக்கு தங்களது போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றனர். புலிபாய்ந்த கல் பிரதான வீதிக்கான பாலத்தினை அபிவிருத்தி செய்து தந்தால் வெள்ள காலத்தில் தங்களது போக்குவரத்தினை மேற்கொள்ள இலகுவாக அமையும் என தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கோறளைப்பற்று கிரான் தெற்கு பிரதேச செயலகம் தற்காலிகமாக பொதுமக்களின் சேவைக்காக கோரகல்லிமடுவில் உள்ள அரச கட்டடத்தில் இயங்கி வருகிறது. மாவட்டத்தின் சில குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் ஆற்றை அண்டிய பிரதேசங்கள் மற்றும் தாழ் நிலப் பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் கடல் ஆறு குளம் போன்றவற்றில் நீராடுவதை தவீர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மினவர்களும் மிக அவதானத்துடன் இருக்கவேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட அணர்த்த முகாமைத்துவப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
சேனாநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான்கதவுகள் திறப்பு; மக்களை அவதானமா இருக்குமாறு அறிவுறுத்தல்

சேனாநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான்கதவுகள் திறப்பு; மக்களை அவதானமா இருக்குமாறு அறிவுறுத்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு