Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் மூக்குடைபட்ட சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் அணியினர்

திருகோணமலையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் மூக்குடைபட்ட சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் அணியினர்

2 years ago
in அரசியல், செய்திகள்

திருகோணமலையில் நடைபெற்ற கடந்த (18) ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெற்றிருந்தது.

இந்த கூட்டத்தின் போது சிறீதரனின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பல முன்மொழிவுகளை சுமந்திரன் தரப்பு நடைமுறைப்படுத்த எத்தனித்திருக்கிறார்கள். ஆனால் அந்த முயற்சிகள் எவையும் கைகூடவில்லை என கூட்டத்தில் கலந்துகொண்ட தரப்புக்கள் தெரிவித்தனர்.

பாராளுமன்ற குழு சர்வதேச தூதுவர்களுடன் சந்திப்புக்களை நடாத்தும் போது சுமந்திரனையும் அழைத்து செல்ல வேண்டும் என்று சாணக்கியன் ஒரு முன்மொழிவை கொண்டுவந்திருந்தார். ஆனால் அப்படி தேவையில்லை, பாராளுமன்ற குழுவை சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் அழைத்தால் பாராளுமன்ற குழு மட்டும் தான் சந்திக்க வேண்டும், அந்த குழுவிற்குள் சுமந்திரன் தேவையற்ற நபர் என கூட்டத்தில் இருந்த முக்கிய சிலரின் கருத்தாக பதிவு செய்தார்கள். இந்த விடயம் தீர்மாணம் எடுக்கப்படாமல் அப்படியே விடப்பட்டது. (மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் மக்களின் மனநிலையை புரிந்து செயற்பட வேண்டும் என்று கூட்டத்தில் பலர் பேசிக்கொண்டனர்)

அரசியலமைப்பு உருவாக்க விவகாரங்கள், அரசியல் சார் உயர் கூட்டங்களில் கட்சியின் பதில் தலைவர் என்ற வகையில் CVK சிவஞானமும், சுமந்திரனும் அழைத்து செல்லப்பட வேண்டும் என்று சுமந்திரன் தரப்பால் கோரிக்கை விடப்பட்டது. CVK சிவஞானம் கட்சி தலைவர் என்ற கோதாவில் அழைத்து செல்லப்படலாம், சுமந்திரன் என்ன அடிப்படையில் அழைக்கப்பட வேண்டும் என ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் எதுவும் இல்லாமல் முழித்தார்கள் சுமந்திரன் தரப்பு. அத்தோடு இந்த விடயமும் கிடப்பில் போடப்பட்டது.

பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு கவுன்சில் வராற்றில் முதலாவது தமிழ் உறுப்பினராக சிறீதரன் இந்த முறை உள்ளக தேர்தலில் வென்று தெரிவுசெய்யப்பட்டிருந்தார். அந்த கவுன்சில் இதுவரை 6 தடவைக்கு மேல் கூடி பல முக்கிய நியமனங்களை வழங்கும் முடிவை இறுதி செய்திருக்கிறது.

அந்த வரிசையில் அன்மையில் ஊழல் இலஞ்ச ஆணைக்குழுவின் இயக்குனர் தெரிவின் போது இருவர் முன்னிலையில் இருந்தார்கள். அந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட போட்டியில் சிறீதரனின் வாக்கு தீர்மானிக்கும் வாக்காக இருந்தது. அதில் தற்போது இயக்குநராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நீதிபதிக்கு சிறீதரன் தனது வாக்கை செலுத்தியிருந்தார். (குறித்த நீதிபதி அதன் ஞானசார தேரருக்கு 4 வருட கடூளிய சிறைத்தண்டனை விதித்தவர்)

இந்த விடயம் மத்திய குழுவில் பேசுபொருளாக எடுக்கப்பட்டு சஜித் பிரேமதாச ஆதரவளித்தவருக்கு சிறீதரன் ஆதரவளித்திருக்க வேண்டும் என சுமந்திரனும் சயந்தனும் குத்திமுறிந்தார்கள். இதன்போது கருத்து தெரிவித்த சிறீதரன் “அரசியலமைப்பு கவுன்சில் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை நான் எடுப்பேன் நீங்கள் உங்கள் வேலைகளை மட்டும் செய்யுங்கள்” என்ற சாரப்பட்ட காட்டமான பதிலை சொன்ன போது அனைவரும் அமைதியானார்கள்.

பின் மட்டக்களப்பு துரைராஜசிங்கம் “அரசியலமைப்பு கவுன்சில் விடயங்களில் சுமந்திரனின் ஆலோசனையை பெற வேண்டும்” என கூற முற்பட, அதற்கு சிறீதரன் “எனக்கு சொந்த சுயபுத்தி இருக்கிறது என்ன முடிவு எடுக்க வேண்டும் என எனக்கு தெரியும் நீங்கள் வேண்டுமானால் அவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுங்கள்” என பதில் கூற துரைராஜசிங்கம் அமைதியானார்.

இப்படி பல விடயங்கள் மூலம் மத்திய குழு கூட்டத்தில் சிறீதரனை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும் என்ற முன்முயற்சிகளை சுமந்திரன் தரப்பு தீவிரமாக முன்னெடுத்தது. ஆனால் அவை எவையும் பலனளிக்கவில்லை.

உண்மையில் நடந்த விடயம் இப்படி இருக்க, சுமந்திரனின் நிதி முதலீட்டில் வசந்தம் TV முன்னாள் தொகுப்பாளர் தனராஜின் தலைமையில் இயங்கிவரும் காலைமுரசு பத்திரிகையில், நடந்த விடயத்தை முற்றாக மடைமாற்றி சுமந்திரனுக்கு சார்பாக எல்லாம் நடந்தது போல இனி இது இரகசியம் இல்லை என்ற பத்தியில் வாங்கும் சம்பளத்திற்கு செம்படித்தி்ருப்பார் ஊடகவியலாளர் வித்தியாதரன் அவர்கள்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
சினிமா

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
Next Post
மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு ஊழல் செய்யும் அதிகாரிகள்; சாணக்கியன் குற்றச்சாட்டு

மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு ஊழல் செய்யும் அதிகாரிகள்; சாணக்கியன் குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.