Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போக்குவரத்து விதி மீறல்களை தடுக்க புதிய திட்டம்

போக்குவரத்து விதி மீறல்களை தடுக்க புதிய திட்டம்

2 years ago
in செய்திகள்

தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் கூடிய புதிய போக்குவரத்து விதிமீறல் முகாமைத்துவ மென்பொருள் ஒன்று பொலிஸ் சிசிடீவி பிரிவில், நேற்று (20) பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காத சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, இந்த மென்பொருள் நேற்று (20) முதல் சிசிரிவி பிரிவில் செயல்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மென்பொருள் பிரைம் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட் மூலம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல், கொழும்பு மற்றும் சுற்றியுள்ள நகரங்களில் நிறுவப்பட்ட சிசிரிவி அமைப்புகள் மூலம் பதிவு செய்யப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத அறிவிப்புகளை இலங்கை பொலிஸ் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கத் தொடங்கியது.

போக்குவரத்து மீறலுக்கான காணொளி ஆதாரங்களுடன் கூடிய இந்த அபராத அறிவிப்புகள், பதிவு செய்யப்பட்ட வாகன உரிமையாளரின் வீட்டிற்கு நேரடியாக அனுப்பப்படுகின்றன.

தற்போது வரை, சிசிரிவி காட்சிகள் மூலம் கைப்பற்றப்பட்ட 12,918 போக்குவரத்து விதி மீறல் சம்பவங்கள் தொடர்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், குற்றங்களுக்கான காணொளி ஆதாரங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகைகள் குற்றவாளிகள் வசிக்கும் பகுதிகளை உள்ளடக்கிய அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், முந்தைய மென்பொருள், அதன் சிக்கலான தன்மை காரணமாக இந்தக் கடமைகளைச் செய்யும் அதிகாரிகளுக்கு குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தியது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த சிரமங்களை நிவர்த்தி செய்வதற்கும் செயல்முறையை நெறிப்படுத்துவதற்கும் புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
70 மில்லியன் ரூபா முறைகேடு தொடர்பில் நாமல் ராஜபக்ஸவிடம் தனி விசாரணை

70 மில்லியன் ரூபா முறைகேடு தொடர்பில் நாமல் ராஜபக்ஸவிடம் தனி விசாரணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு