Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அர்ச்சுனா லோச்சன் என எழுதப்பட்ட பெயர்; அர்ச்சுனாவின் வழக்கில் சரியான நபரை முன்னிலையாக்குமாறு உத்தரவு

அர்ச்சுனா லோச்சன் என எழுதப்பட்ட பெயர்; அர்ச்சுனாவின் வழக்கில் சரியான நபரை முன்னிலையாக்குமாறு உத்தரவு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நீதிமன்றில் சரியான சந்தேக நபரை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை ஒத்திவைக்க அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நீதிமன்றில் பிரேரணையுடன் முன்னிலையாகிய வேளை, அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​அனுராதபுரம் பொலிஸார் சந்தேக நபரின் பெயரை அர்ஜுன லோச்சன் எனப் பயன்படுத்தியுள்ளனர்.

ஆனால் சாரதி அனுமதிப் பத்திரத்தில் அவரது பெயர் இராமநாதன் அர்ச்சுனா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே சரியான சந்தேக நபரை கண்டுபிடித்து நீதிமன்றில் முன்னிலையாக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக அர்ச்சுனாவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுராதபுரம் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அனுராதபுரம் – கல்வல பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவைக் கைது செய்வது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தது.

வீதி விதிகளை மீறி காரைச் செலுத்தியமைக்காக பொலிஸார் இராமநாதன் அர்ச்சுனாவின் காரை தடுத்து நிறுத்தியதாகவும், இதன்போது இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் நேற்று முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இதற்கமைய இந்த விடயம் தொடர்பான விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்தப் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இந்த வழக்கு தொடர்பில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை இன்றைய தினம் தாக்கல் செய்து குறித்த வழக்கை இன்றைய தினமே விசாரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, பிற்பகல் 1.30 க்கு வழக்கை விசாரிக்க அனுராதபுரம் நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையிலும் அமைதியின்மை!
செய்திகள்

நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையிலும் அமைதியின்மை!

August 7, 2026
களுத்துறையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!
செய்திகள்

களுத்துறையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

August 7, 2026
நுவரெலியாவில் சீரற்ற காலநிலை; 8,191 பேர் பாதிப்பு; 6 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நுவரெலியாவில் சீரற்ற காலநிலை; 8,191 பேர் பாதிப்பு; 6 பேர் உயிரிழப்பு!

August 7, 2026
பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு; திங்கட்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!
செய்திகள்

பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு; திங்கட்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

August 7, 2026
ஆகஸ்ட் மாதத்திற்கும் லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை!
செய்திகள்

ஆகஸ்ட் மாதத்திற்கும் லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை!

August 7, 2026
குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு!
செய்திகள்

குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு!

August 7, 2026
Next Post
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை லண்டனில் வைத்து கைது செய்ய முயலும் அமைப்புக்கள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை லண்டனில் வைத்து கைது செய்ய முயலும் அமைப்புக்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு