ஆகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, தற்போதைய சந்தை விலைகளே ஆகஸ்ட் மாதத்திலும் தொடரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் ரூ.6,245-க்கும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ரூ.2,500-க்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.
இதனிடையே, லிட்ரோ எரிவாயு நிறுவனமும் ஆகஸ்ட் மாதத்திற்கான எரிவாயு விலைகளில் எந்த மாற்றமும் இல்லை என ஏற்கனவே அறிவித்திருந்தது.








