மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் தனது வீட்டில் நண்பருடன் ஐஸ் போதைப்பொருள் பாவித்துக்கொண்டிருந்த கணவனால் தாக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கணவர் அவரது நண்பருடன் ஐஸ் போதை பொருள் பாவித்து விட்டு கரம் போர்ட் விளையாடி கொண்டிருந்த வேளையில் மனைவிக்கும் கணவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் போதையில் நிதானம் தவறிய கணவர் கரம்போர்டினால் மனைவின் தலையில் தாக்கியுள்ளார். பாரிய காயங்களுக்குள்ளாகி இரத்த வெள்ளத்தில் கிடைத்த மனைவி உறவினர்களால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.