Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
30 மில்லியன் மோசடி செய்த தம்பதியினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

30 மில்லியன் மோசடி செய்த தம்பதியினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

1 year ago
in செய்திகள்

32 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் கைது செய்யப்பட்ட தம்பதியினரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த தம்பதியினரை நேற்றையதினம் (22) நீதிமன்றில் முற்படுத்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ருமேனியாவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி சுமார் 30 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக ஒரு தம்பதியினருக்கு எதிராக மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

விசாரணையின் போது 28க்கும் மேற்பட்ட நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளித்து நிதி மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

அவர்கள் 30 மில்லியன் ரூபாய் நிதியை மோசடி செய்ததாக செய்யப்பட்ட வழக்குக்கு அமைய ஏறாவூர் நீதிமன்றத்தால் குறித்த கணவனுக்கு எதிராக 16 பிடியாணைகளும், மனைவிக்கு எதிராக 16 பிடியாணைகளும் ஆக 32 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த தம்பதியினர் மட்டக்களப்பில் இருந்து வெளியேறி வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் வவுனியா பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கடந்த செவ்வாய்கிழமை (21) கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இருவரையும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய வேளை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரியை விதித்தது அமெரிக்கா
உலக செய்திகள்

இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரியை விதித்தது அமெரிக்கா

July 24, 2026
முகநூல் நட்பு பெயரில் ரூ.8.37 இலட்சம் மோசடி; மட்டக்களப்பில் பெண் ஒருவர் பணம் இழப்பு!
செய்திகள்

முகநூல் நட்பு பெயரில் ரூ.8.37 இலட்சம் மோசடி; மட்டக்களப்பில் பெண் ஒருவர் பணம் இழப்பு!

July 24, 2026
செம்மணி மனிதப் புதைகுழியில் மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!

July 24, 2026
புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்

July 23, 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

July 23, 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!

July 23, 2026
Next Post
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு