Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு திருப்பெருந்துறை மைதான காணியை சொந்தம் கொண்டாடி வந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகர்; தடுத்து நிறுத்திய மக்கள்

மட்டு திருப்பெருந்துறை மைதான காணியை சொந்தம் கொண்டாடி வந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகர்; தடுத்து நிறுத்திய மக்கள்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு திருப்பெருந்துறை மறுமலர்ச்சி விளையாட்டு கழக மைதானத்தை தனது காணி என உறுதி உட்பட ஆவணங்களுடன் சென்று வேலி நாட்ட வந்த கொழும்பைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை பொதுமக்கள் அங்கிருந்து விரட்டியடித்துள்ள சம்பவம் இன்று வியாழக்கிழமை (23) இடம் பெற்றுள்ளது

மட்டக்களப்பில் பொலிஸ் அத்தியட்சகராக (எஸ்.பி.பி) கடமையாற்றி, 2023 ம் ஆண்டு ஓய்வு பெற்ற தென்னிலங்கை பகுதியைச் சேர்ந்தவர், குறித்த பிரதேசத்திலுள்ள மறுமலர்ச்சி விளையாட்டு கழக மைதானமாக பயன்படுத்தப்பட்டுவரும் மைதானத்தில் ஒருபகுதியை சம்பவதினமான இன்று பகல் 11.00 மணியளவில் ஆட்களுடன் கட்டைகள் கொண்டு அடைக்க முற்பட்டார்.

இதனையடுத்து அங்கு ஒன்று கூடிய பொதுமக்கள் இது விளையாட்டு மைதான காணி இதனை அடைக்க விடமுடியாது என தெரிவித்து அடைக்க விடாது தடுத்ததையடுத்து, ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் எற்பட்டு பொரும் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து, பொலிசார் வரவழைக்கப்பட்டனர்

இதன் போது ஒய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி தான் சட்டரீதியாக 2023 ம் ஆண்டு ஒருவரிடம் இருந்து 15 பேர்ச் காணியை சட்ட ரீதியாக சட்டத்தரணி ஊடாக வாங்கியுள்ளதாகவும், என்னிடம் சட்ட ரீதியான ஆவணங்கள் உள்ளதெனவும் காட்டி, மக்கள் காணியை அடைக்க விடாது தடுத்துள்ளதாக பொலிசாரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து பொதுமக்கள், குறித்த காணி கடந்த 1895 ம் ஆண்டு தொடக்கம் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருவதாகவும், இது அரசகாணி எனவும் இவர் ஒரு பொலிஸ் அதிகாரி அவரது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக காணியை அபகரிக்க வந்துள்ளார், இவரைப் போல கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒருவர் ஒரு ஆவணங்களை கொண்டுவந்து இது தனது காணி என சொந்தம் கொண்டாடிய நிலையில் அவரை தடுத்ததையடுத்து, வந்த நபர் போனவர் போனவர்தான்,

அவ்வாறு இந்த மைதானத்தில் உள்ள காணியை அடைக்கவிடாது தடுத்தபோது பொலிஸ் அதிகாரி இந்த மைதான காணி 10 பேருக்கு இருப்பதாகவும், இதில் 15 பேச் காணியை தான் ஒருவரிடம் வாங்கியதாகவும் எனது 15 பேர்ச் காணியை தந்தால் நான் மைதானத்தை புனரமைத்து தருவாகவும் எங்களிடம் அவர் தெரிவித்தார்.

இவர் என்ன காரணத்துக்காக மைதானத்தை புனரமைத்து தரவேண்டும்? எனவே குறித்த காணியை விற்பனை செய்தவர் யார் அவரை வரவழையுங்கள் நீங்கள் வைத்திருக்கும் ஆவணங்கள் யாவும் போலியாக தயாரிக்கப்பட்டது என தெரிவித்து வேலி அடைக்கவிடாது தடுத்தோம் என்றனர்.

தொடர்ந்தும் மக்கள் குறித்த காணிக்கு சொந்தம் கொண்டாடிய பொலிஸ் அதிகாரியை வேலியடைக்க விடாது தடுத்தனர். இதனையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி தடுத்த மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் அவர்கiளை எச்சரித்துவிட்டு அங்கிருந்து ஆட்களுடன் வெளியேறிச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக மட்டு தலைமையக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்து ஓட்டியவர் கைது!
செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்து ஓட்டியவர் கைது!

June 8, 2026
மனிதர்கள் காடுகளை அழிப்பதால்தான் யானைகள் கிராமங்களை நோக்கி வருகின்றன; மட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சுரேஸ்குமார்
செய்திகள்

மனிதர்கள் காடுகளை அழிப்பதால்தான் யானைகள் கிராமங்களை நோக்கி வருகின்றன; மட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சுரேஸ்குமார்

June 8, 2026
பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

June 8, 2026
ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி!
செய்திகள்

ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி!

June 8, 2026
மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்!
செய்திகள்

மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்!

June 8, 2026
அக்கரப்பத்தனையில் ஐஸ் போதை பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது
செய்திகள்

அக்கரப்பத்தனையில் ஐஸ் போதை பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது

June 8, 2026
Next Post
மார்பக புற்றுநோய்க் கட்டிகளை ஒரே தடவையில் கரைக்கும் மருந்து கண்டுபிடிப்பு

மார்பக புற்றுநோய்க் கட்டிகளை ஒரே தடவையில் கரைக்கும் மருந்து கண்டுபிடிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு