Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அகதிகளை திருப்பி அனுப்பும் அமெரிக்காவின் திட்டம்; உடன்படும் இந்தியா

அகதிகளை திருப்பி அனுப்பும் அமெரிக்காவின் திட்டம்; உடன்படும் இந்தியா

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை வெளியேற்றும் விவகாரத்தில் அமெரிக்காவின்நடவடிக்கையில் உடன்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற பின்னர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதில் குறிப்பாக அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

இதனடிப்படையில், அமெரிக்காவிற்கான அகதிகள் வருகை மறு உத்தரவு வரும் வரை இடைநிறுத்தப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது.

அத்தோடு, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தப்போவதாகவும் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை வெளியேற்றும் விவகாரத்தில் அமெரிக்காவின் நடவடிக்கையில் உடன்படுவதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருக்கும் மக்களில் இந்தியர்கள் இருந்தால் அவர்கள் இந்தியர்கள்தான் என்பது உறுதியானால் அவர்களுக்காக இந்தியாவின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

இந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், இந்தியாவின் இந்த நிலைப்பாடு அமெரிக்காவுக்கு மட்டுமே பிரத்யேகமானது அல்ல.

உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்தியர்கள் இருக்கிறார்கள், எந்த நாடாக இருந்தாலும் அங்கே சட்டவிரோத குடியேற்றம் என்பது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடியது.

பல சட்டவிரோத செயல்களை ஊக்குவிக்கக் கூடியது எனவே, ஓர் அரசாக நாங்கள் அமெரிக்காவின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ஆதரிக்கிறோம்.

அதேவேளையில், இந்தியத் திறமைகள் உலக அளவில் அதிகபட்ச வாய்ப்பை பெற வேண்டும் என விரும்புகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; புதிய வானிலை அறிவிப்பு!
செய்திகள்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; புதிய வானிலை அறிவிப்பு!

October 1, 2026
நயினாதீவு அம்மன் ஆலயத்திலிருந்து அகண்ட தீபம் கொண்டு செல்ல 86 இந்திய யாத்திரிகர்கள் யாழ்ப்பாணம் வருகை!
செய்திகள்

நயினாதீவு அம்மன் ஆலயத்திலிருந்து அகண்ட தீபம் கொண்டு செல்ல 86 இந்திய யாத்திரிகர்கள் யாழ்ப்பாணம் வருகை!

October 1, 2026
வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு
செய்திகள்

வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு

October 1, 2026
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு!

October 1, 2026
13 மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தியதால் அரசுக்கு ரூ. 5.7 பில்லியன் இலாபம்!
செய்திகள்

13 மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தியதால் அரசுக்கு ரூ. 5.7 பில்லியன் இலாபம்!

October 1, 2026
சின்னக்கதிர்காமம் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நிறைவு!
செய்திகள்

சின்னக்கதிர்காமம் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நிறைவு!

October 1, 2026
Next Post
அரசிடம் விவசாயிகள் போராட்ட இயக்கம் முன்வைத்துள்ள கோரிக்கை

அரசிடம் விவசாயிகள் போராட்ட இயக்கம் முன்வைத்துள்ள கோரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு