Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வவுனியாவில் வீடு உடைத்து கொள்ளை; பெண் மீதான பாலியல் வன்முறை தொடர்பில் ஐவர் கைது!

வவுனியாவில் வீடு உடைத்து கொள்ளை; பெண் மீதான பாலியல் வன்முறை தொடர்பில் ஐவர் கைது!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வவுனியா, மடுகந்தை – மயிலங்குளம் பகுதியில் வீடொன்றை உடைத்து கொள்ளையிட்டதுடன், வீட்டில் இருந்த 51 வயது பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, வீட்டின் வாகன சாரதி மீது வாளால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பெண்ணை கட்டுப்படுத்தி அவரிடமிருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கற்கள், 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள், 5.7 இலட்சம் ரூபாய் பணம் உள்ளிட்ட பொருட்களுடன் காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்களும் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா பொலிஸார் முதற்கட்டமாக இருவரை கைது செய்ததுடன், பின்னர் மேலும் மூவரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகன ஆவணங்கள், திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் மற்றும் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!
செய்திகள்

டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!

September 30, 2026
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்
காணொளிகள்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்

September 30, 2026
மட்டு களுதாவளை மீன் சந்தையில் சுகாதாரமற்ற 8 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு!
செய்திகள்

மட்டு களுதாவளை மீன் சந்தையில் சுகாதாரமற்ற 8 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு!

September 30, 2026
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் டொலர் நிதி!
செய்திகள்

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் டொலர் நிதி!

September 30, 2026
பிணை கிடைத்தும் விடுதலையாக முடியாத நிலையில் நாமல்
செய்திகள்

பிணை கிடைத்தும் விடுதலையாக முடியாத நிலையில் நாமல்

September 30, 2026
தலவாக்கலையில் மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது
செய்திகள்

தலவாக்கலையில் மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது

September 30, 2026
Next Post
கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; முஸ்லிம் சமூகத்தை வம்புக்கு இழுக்கும் முயற்சி – ரவூப் ஹக்கீம்

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; முஸ்லிம் சமூகத்தை வம்புக்கு இழுக்கும் முயற்சி – ரவூப் ஹக்கீம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு