Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை மீது குற்றம் சாட்டி குரல் பதிவு; வைத்தியசாலை சமூகம் பதில்

களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை மீது குற்றம் சாட்டி குரல் பதிவு; வைத்தியசாலை சமூகம் பதில்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை தொடர்பில் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குற்றச்சாட்டிற்கு வைத்தியசாலை சமூகம் பதில் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் வைத்தியசாலை சமூகம் தெரிவிக்கையில்,

களுவாஞ்சிகுடிஆதார வைத்தியாலை சம்பந்தமாக சமூக வலைத்தளங்களில் வெளியான ஒரு தவறான தகவலால், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (29) முதல் சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் ஒரு குரல் பதிவில், இறந்த நோயாளி ஒருவரின் மரணம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. நோயாளி பித்தப்பை சத்திரசிகிச்சையினால் இறப்பு ஏற்பட்டதாக குரல் பதிவில் கூறப்படுகின்றது.

உண்மையில் குறித்த நோயாளி குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு சத்திரசிகிச்சை மூலம் குணமடைந்து வீடு திரும்பியவர்.

பின்னர், காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த தவறான தகவலை வெளியிட்ட நபர், நோயாளியின் மருத்துவ வரலாறு மற்றும் இறப்புக்கான காரணத்தை சரிவர அறிந்துகொள்ளாமல், அவதூறு பரப்பியுள்ளார். இதனால், வைத்தியசாலையின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, குறிப்பாக நோயாளியின் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு இம் மரணம் பற்றி சந்தேகம் ஏற்பட்டு இருந்தால் அருகாமையிலுள்ள எமது வைத்தியசாலைக்கு நேரடியாகவோ அல்லது எழுத்து மூல முறைப்பாடு மூலமோ அறிவித்து இருந்திருக்கலாம். அல்லது இதன் மேலதிக விளக்கம் தேவையாயின் 0777393169 எனும் தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு அறியப் பெற்றிருக்கலாம்.

அந்தவகையில் அதன் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதானது, அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் வைத்தியசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், அதன் சேவையின் தரத்தையும், ஊக்கத்தையும் பாதிக்கக்கூடும்.

எனவே, சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களின் ஆபத்தை உணர்ந்து, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். எந்தவொரு தகவலையும் சரிபார்க்காமல் பகிர்வதைத் தவிர்க்கவேண்டும்.

அத்துடன் சென்ற மாதம் ஆண் சத்திரசிகிச்சை விடுதியில் ஒரு நோயாளி இதே வைத்தியசாலையையும் அதே சத்திரசிகிச்சை நிபுணரையும் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததையும் நினைவு கூருகின்றோம். என்று அந்த செய்தியில் குறிப்பிடப்படுகின்றது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு
செய்திகள்

திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு

September 30, 2026
பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

September 30, 2026
தேர்தலுக்கு முன்பே எனக்கு எதிரான சேறடிப்பு பிரசாரங்கள் ஆரம்பம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!
செய்திகள்

தேர்தலுக்கு முன்பே எனக்கு எதிரான சேறடிப்பு பிரசாரங்கள் ஆரம்பம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!

September 30, 2026
பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழு கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்!
செய்திகள்

பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழு கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்!

September 30, 2026
டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!
செய்திகள்

டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!

September 30, 2026
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்
காணொளிகள்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்

September 30, 2026
Next Post
யாழ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர

யாழ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.