யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (31) காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டுள்ளார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட ஆளும் தரப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மேலும் பல பொதுக் கூட்டங்களில் ஜனாதிபதி கலந்து கொள்வார் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி ஆராய உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.