Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாவையின் மரணவீட்டுக்கு நான் வரமாட்டேன் – யாராவது செல்லவிரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை செய்வேன்; சாணக்கியன்

மாவையின் மரணவீட்டுக்கு நான் வரமாட்டேன் – யாராவது செல்லவிரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை செய்வேன்; சாணக்கியன்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மாவையின் மரணவீட்டுக்கு நான் வரமாட்டேன் என்றும், மட்டக்களப்பில் இருந்து யாராவது செல்லவிரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்து தருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தமிழரசுக்கட்சி மாவட்ட கிளையினருக்கு அறிவித்துள்ளார்.

சாணக்கியன் நேபாளத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டிருப்பதாகவும், அதனாலேயே அவரால் மாவையின் மரணவீட்டில் கலந்துகொள்ளமுடியாமல் இருப்பதாகக் கூறப்பட்டுவருகின்றது.

இருந்தபோதிலும், மாவையின் இறுதி வணக்க நிகழ்வு நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே அந்தக் கருத்தரங்கு நிறைவுபெற்றுவிட்டதாகவும், சாணக்கியன் நினைத்திருந்தால் உடனடியாகவே இலங்கைக்குத் திரும்பிவதிருக்க முடிந்திருக்கும் என்றும் கூறுகின்றார் தமிழரசுக் கட்சியின் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.

மாவையின் மரணவீட்டுக்கு மாவையுடன் முன்னர் முரன்டுபட்ட சில முன்நாள் நாடாளுன்ற உறுப்பினர்கள் செல்லமுடியாத நிலை அங்கு காணப்படுகின்றது. மாவையை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி அவரை மரணம் நோக்கி கொண்டு சென்றதான குற்றச்சாட்டுகள், பல தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் மீது சமூகவைத்தளங்களில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

மாவையின் மரணத்திற்குக் காரணமானவர்கள் அவரது மரணவீட்டுக்கு வந்து அரசியல் செய்தால் அவர்கள் மீது தமது கோபத்தை வெளிக்காண்பிப்போம் என்று மாவையின் உறவினர்களும், ஆதரவாளர்களும் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மாவையை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியவர்கள் வரிசையில் சாணக்கியனை நோக்கியும் குற்றச்சாட்டுக்கள் சில தமிழரசுக் கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுவருகின்றது.

இந்த நிலையில் சாணக்கியன் மாவையின் மரணவீட்டுக்குச் சென்றால் அங்கு வைத்து மவையின் ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினர் சாணக்கியனை நோக்கி கேள்விக்கணைகளைத் தொடுப்பார்கள் என்ற அச்சம் காரணமாகவே மாவையின் மரணவீட்டை சாணக்கியன் தவிர்ப்பதாகக் கூறுகின்றார்கள் சில மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!
செய்திகள்

உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!

October 3, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

October 3, 2026
மட்டக்களப்பு வெல்லாவெளியில் 2500 ஆண்டு பழமையான தமிழர் தொன்மைச் சான்றுகள் மீட்பு?
செய்திகள்

மட்டக்களப்பு வெல்லாவெளியில் 2500 ஆண்டு பழமையான தமிழர் தொன்மைச் சான்றுகள் மீட்பு?

October 3, 2026
இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.12 இலட்சம் மோசடி; முன்னாள் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் கைது!
செய்திகள்

இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.12 இலட்சம் மோசடி; முன்னாள் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் கைது!

October 3, 2026
கல்முனை வைத்தியசாலை விவகாரம்; ஆறு பேருக்கு இலவச சட்ட உதவி வழங்க கோரிக்கை!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலை விவகாரம்; ஆறு பேருக்கு இலவச சட்ட உதவி வழங்க கோரிக்கை!

October 3, 2026
பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலப் பதக்கம் வென்றது!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலப் பதக்கம் வென்றது!

October 3, 2026
Next Post
இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வு; ஒரு வருடத்தில் 2500 குழந்தைகள் இறப்பு

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வு; ஒரு வருடத்தில் 2500 குழந்தைகள் இறப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு